Published : 01 Sep 2022 04:17 PM
Last Updated : 01 Sep 2022 04:17 PM

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.1 - 7

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

1ம் தேதி - சுக்கிர பகவான் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் ராசியில் இருக்கக்கூடிய சுக்கிரன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களுக்கு எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரத்து அதிகரிக்கும். ஆனாலும் வீண் பிரச்சினைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் காணும். தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும்.

அரசாங்கத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை.

கலைத்துறையினர் வெளியில் தங்க நேரிடும். அதிகமான பிரயாணங்களால் சோர்வு ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

பரிகாரம்: துர்க்கையை திங்கள்கிழமை அன்று வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.

***********

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூர்யன், புதன்(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

1ம் தேதி - சுக்கிர பகவான் - ராசிக்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் ராசிநாதன் ராசியில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். சுக்கிரன் ராசிக்கு வருகை தர இருக்கிறார். மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு மறையும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும்.

தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு உடன் இருப்பவர்களிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. அரசியல்வாதிகள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண்செலவுகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.

பரிகாரம்: வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும்.

***********

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி(வ) - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.

1ம் தேதி - சுக்கிர பகவான் - அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் ராசிநாதன் புதன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் கிடைக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். ராசிநாதனே தொழில் ஸ்தானாதிபதியும் ஆகிறார்.

தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. மேலிடத்தின் கனிவான அனுசரனையால் சந்தோஷம் கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும்.

பெண்களுக்கு சுபநிகழ்வுகளில் இருந்த தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திற்கும் உங்களுக்கும் திடீர் இடைவெளி ஏற்படலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ செப். 1- 7 வரை

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x