Last Updated : 30 Jan, 2025 03:48 PM

 

Published : 30 Jan 2025 03:48 PM
Last Updated : 30 Jan 2025 03:48 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன.30 - பிப்.5

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 05-02-2025 புதன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்தவாரம் எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். கணவன் மனைவி, குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் சனியின் நற்செயல்கள் இருக்கும். தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்டுப் பெற வருவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அரசு, தனியார் துறைகளில் உள்ளவர்களும் இதுவரை இருந்த ஆடம்பர செலவினங்களை தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். தொழிலதிபர்கள் ஊழியர்களின் ஒத்துழைப்பை பெற்று உற்பத்தியிலும் விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள். தொழில் மேன்மைக்காக நிறுவன இட விஸ்தரிப்பு, புதிய கிளை துவக்கம் போன்ற நற்பலன்களைப் பெறுவார்கள்.

பெண்கள் அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். மாணவர்கள் தகுதியான பணிகளைச் செய்யும் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்க்கிழமைதோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும். சனிக்கிழமை தோறும் முருகனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 05-02-2025 புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்தவாரம் மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். திருமணமானவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். வயது வந்த புத்திரர் உள்ளவர்களுக்கு நல்ல உதவிகள் கிடைக்கபெறும். புகைப்பிடித்தல் மதுகுடித்தல் போன்ற நச்சுத்தன்மை பொருந்தியவற்றை உபயோகப்படுத்துல் கூடாது. தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் செயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.

உத்தியோகஸ்தர்கள் துறைசார்ந்த பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். வியாபாரிகள் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். இருப்பினும் உடல்நிலையில் கவனமுடன் இருக்க வேண்டி வரும். மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள். தேவையான பொருளாதாரம் கிடைக்கப்பெற்று தகுதியான செலவுகளை செய்து நற்பெயர் பெறுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சாத்தி வழிபடவும்.

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் (வ) - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ) என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 05-02-2025 புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ஆற்றலும் வாழ்க்கையில் வளமும் நலமும் அதிகம் பெறுவீர்கள். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழு காரணமாக இருக்கும். கணவன் மனைவி, குடும்ப ஒற்றுமையில் அனுகூல பயன்கள் உண்டாகும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப்படுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தொழிலதிபர்கள் புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள்.

பெண்கள் நிறைவான வகையில் குழந்தை பாக்கியம் அடையலாம். அழகு சார்ந்த பொருட்களை உருவாக்கும் பெண்கள் நிறைவான வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர். மாணவர்கள் தகுந்த சமயத்தில் நுணுக்கங்களை அறிந்து நற்பெயர் அடைவார்கள். நண்பர்களும் உதவி செய்வார்கள்.

பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு தேங்காய் நீராஞ்சன தீபம் ஏற்றவும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x