Published : 25 Dec 2024 07:46 PM
Last Updated : 25 Dec 2024 07:46 PM
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் குடும்ப நிலைகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்தபடி பணம் மட்டும் கைக்கு வந்து செல்லும். ஆனால் சேமிப்பதற்கு முயற்சி செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தையும் தன ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி செல்வீர்கள்.
பேசப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்களில் சிக்கல்கள் விலகும். பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அரசல் புரசலாக தங்களை கேலி பேசியவர்கள் கூட தங்களது தவறான போக்கை மாற்றிக் கொள்வர்.
உங்களது நேர்மையான முன்னேற்றம் எந்த தடங்கல்கள் வந்தாலும் சாதிப்பீர்கள். உங்களது தெய்வ பலம் அத்தனை எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள். பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முடிந்து ஓரளவு நன்மைகள் நடக்கும். நிலம், மனை சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும். பெண்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
கலைத்துறையினருக்கு விருதுகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.
திருவோணம்: இந்த வாரம் கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை, தாமதம் வரலாம். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சினை தீரும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த வாரம் ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செயல்படுவது நல்லது. பணவரவு ஏற்படும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூரியன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்க வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். தந்தை வழி மூலம் அனுகூலம் கிடைக்கும்.
அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். சேமிப்பு உயரும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும்.
அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.
சதயம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். அதேநேரம் ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம்.
உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி உங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும். இதன் மூலம் பொதுநலக் காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த நல்வாய்ப்பு உருவாகும்.
உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.
வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு நிறைவான ஆதரவு வந்து சேரும். மாணவமணிகளுக்கு சாதனைகள் புரிவதற்கு பொன்னான காலமிது.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம்.
உத்திரட்டாதி: இந்த வாரம் காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். எதிரில் இருப்பவர்களை எடைபோடுவது நல்லது. முன்கோபம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.
ரேவதி: இந்த வாரம் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
பரிகாரம்: குலதெய்வத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT