Published : 13 Nov 2024 02:02 PM
Last Updated : 13 Nov 2024 02:02 PM
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பிடிக்கும் வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் இருந்தத் தடைகள் அகலும். புதிய வீடு வாகன சேர்க்கை ஏற்படும். பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சாதுர்யமாக சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும். பெண்களுக்கு தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். பெற்றோர் ஆசிரியர்கள் ஆதராவாக இருப்பார்கள்.
கலைத்துறையினருக்கு ஏற்றமான காலமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருக்கும் மனத்தாங்கல்கள் அகலும்.
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று அரளிப்பூ அர்ப்பணித்து வர இடர்பாடுகள் அகலும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - களத்திர ஸ்தானத்தில் புதன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம்.
தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த கடன் சுமை நீங்கும். பங்குதார்களுக்குள் இருந்து வந்த வேற்றுமை அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம்.
வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம்.
கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். மேலிடத்தின் கருணை கிடைக்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன்(வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 16-11-2024 அன்று சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். லாபம் கூடும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.
கலைத்துறையினருக்கு வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு நீடிக்கும்.
பரிகாரம்: புதன் அன்று லட்சுமிநரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழில் போட்டிகள் குறையும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment