Last Updated : 02 Oct, 2024 07:27 PM

1  

Published : 02 Oct 2024 07:27 PM
Last Updated : 02 Oct 2024 07:27 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.3 - 9

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மன திருப்தியுடன் காரியங்களைச் செய்து வெற்றி காண்பீர்கள். புத்திசாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது.

குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையில்லாமல் அறிவுரை வழங்குவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறையினருக்கு நல்ல மனிதர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கும்.

வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகள் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி எடுப்பீர்கள். அதற்கு தேவையான பண வசதியும் மேலிடத்திலிருந்து கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். தேர்வுகள் சாதகமாக பலன் தரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு கந்தர்சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சினைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத லாபம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.அலுவலகம் தொடர்பான பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பெண்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினர் உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு உங்கள் மனம் நிம்மதியாக இருக்கும். எதிர்கால எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் படிப்புகள் உங்களுக்கு கை கொடுக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது, சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்கள் மீதான நம்பிக்கை மேலோங்கும். அனைவருக்கும் உதவி செய்வீர்கள். உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்தியை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியூர் பயணம் செல்ல நேரலாம் அதனால் உங்களுக்கு நன்மையே.

அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு உற்சாகமாக காணப் படுவீர்கள். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்கும். கலைத்துறையினருக்கு வேலையில் தொய்வு ஏற்படலாம் . எனவே கவனமாக இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். மாணவர்கள் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. சக மாணவர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று அவல் நைவேதனம் செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள்.

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வெற்றி உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில், வியாபாரம் நல்லபடியாக நடக்கும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வரும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து விடுவீர்கள். ஒவ்வொரு காரியத்தையும் கவனமாக செய்வீர்கள்.பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் எதிர்பார்த்த அளவு இருக்காது. ஆனாலும் மனதை தளர விட வேண்டாம்.

முன்னேற்றப் பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். அரசியல்வாதிகள் மேடை பேச்சுகளில் கவனம் தேவை. மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆசிரியர்களிடம் பாராட்டு பெறுவீர்கள்.

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்பாளுக்கு வெள்ளை நிற பூவில் அர்ச்சனை செய்யுங்கள். வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பாராத காரியங்கள் நடந்தேற வாய்ப்புண்டு. வெற்றியால் மனம் மகிழ்ச்ச்சியில் திளைக்கும். கடந்த காலத்தில் இருந்த துன்பங்கள் சற்றென்று விலகும். முயற்சிகள் நல்ல பலன்களைத் தரலாம். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சினைகள் சாதகமான முடிவு பெறும்.

கலைத்துறையினருக்கு சில நட்பு வட்டாரங்களால் தொல்லைகள் வரலாம். அரசியல்வாதிகளுக்கு தெளிவான சிந்தனையும் வெற்றிக்கான வழிகளும் தெரிய வரும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறையும்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். மனதில் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூரியன், புதன், கேது, சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த விஷயங்கள் சற்று தாமதமாக ஏற்பட்டாலும் முடிவில் சாதகமாக முடியும். மனதில் துணிச்சல் ஏற்பட்டு தைரியத்துடன் எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த நன்மையை விட கூடுதலான நன்மையான செய்திகள் வரக் கூடும். உங்களது எண்ணப்படியே காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான வங்கிக் கடன்களும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பெண்களுக்கு ஏற்படும் செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் கவுரவம் உயரும்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பதவிகள், மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் ஏற்படும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியருடன் கலந்து கொள்வது நல்லது. உயர் கல்விக்கு விண்ணப்பித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.

பரிகாரம்: புதன்கிழமை ஸ்ரீநாராயணீயம் சொல்லி வாருங்கள். எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். நன்மைகள் நடக்கும்.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரலாம். பேச்சில் துடிப்பும், ஆற்றலும் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மையாகவே இருக்கும். வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் அதிக அளவில் லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் அதிகமாக நடக்கும்.

புதிய வேலை தொடர்பான விஷயங்கள் நன்மையில் முடியும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் அதிகரிக்கும்.

நீண்ட நாளைய வரவுகள் வசூலாகும். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தேவைப்படும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களுக்கு தேவையான உதவிகளை எந்த தடைகளையும் தாண்டி செய்வீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன் இருப்பவர்களால் அவ்வப்போது பிரச்சினைகள் வரலாம்.

பரிகாரம்: குடும்பத்தில் நிம்மதியுடன் இருக்க தினமும் ஸ்ரீ யோக நரசிம்மரை வழிபடவும். பானகம் நிவேதனம் செய்யுங்கள்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லா விதமான நற்பலன்களும் உண்டாகும். குடும்பத்தில் அமைதிக்கு கூடுதல் ஒத்துழைப்பு தேவை. பணவரவு அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அதிகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி இருக்கும்.

திருமணம், கிரக பிரவேசம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு புதிய நபர்களால் தொல்லைகள் ஏற்படலாம். எதிலும் துணிவுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் நன்மைகள் நடக்கும். அனைவரின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.

எடுத்த காரியம் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் பிரச்சினைகள் எழலாம். உடன் இருப்பவர்களால் நிம்மதி குறையக் கூடிய சூழ்நிலை உருவாகும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு உடனிருப்பவர்களுடன் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களில் முழு கவனமும் இருக்கும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றவும். நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். வர வேண்டிய பணம் தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கவனமாகவும், சாந்தமாகவும் உரையாடுவது வியாபாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எளிதான செயல்களால் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். உங்களுக்கு சொந்தமான பொருள் ஒன்றை இழக்க நேரலாம். பெண்களுக்கு மற்றவரின் விசயங்களில் தலையீடாமல் இருப்பது நன்மையைத் தரும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

அரசியல்வாதிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் செயல்பாட்டில் திருப்தி ஏற்படும். மனமகிழ்ச்சியில் நல்லபடியாக படிப்பீர்கள். கல்வியில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: செந்தில் ஆண்டவரை தினமும் மனதில் துதியுங்கள். நன்மைகள் அதிக அளவில் நடக்கும் .

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் சுமாரான பலன்களையே எதிர்பார்க்க முடியும். திடீரென பண வரவு இருக்கும். இழுபரியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்ல நேரலாம். அது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்கும். ஒப்பந்ததாரர், வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை காரணமாக திடீரென டென்ஷன் ஆகலாம். குடும்பத்தில் இருந்து வந்த தேவையற்ற குழப்பங்கள் சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை நல்லபடியாக முடிக்க முடியும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும்.

நினைத்த இடத்தில் இருந்து பண வரவு இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலிடம் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதரர்களிடையே அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். மாணவர்கள் உடன் பழகுபவர்களிடம் கவனமாக இருப்பது மிகவும் நன்மையைத் தரும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை தினமும் 21 முறை வலம் வர நன்மைகள் அதிகமாக நடக்கும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பண வரவு அதிகமாக இருக்கும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் வர வேண்டிய பாக்கிகள் கை கொடுக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் குறித்த நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பு செய்ய வேண்டி வரும். அலுவலகத்தில் உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீரென மனவருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். பெண்கள் மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். கலைத்துறையினர் அதிக உழைப்பை போடுவதன் மூலம் வெற்றி உண்டாகும். செயல்திறன், அறிவுதிறன் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு முக்கிய முடிவு எடுப்பதில் சிக்கல்கள் வரலாம். கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். தொண்டர்களின் செயல்பாடுகள் நன்மையை விளைவிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். அனைவரின் அன்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.

பரிகாரம்: தினமும் அனுமத்கவசத்தை சொல்லி வாருங்கள். வாழ்வில் ஏற்றம் அடைவீர்கள்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 06-10-2024 அன்று புதன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மனசோர்வு உண்டாகலாம். கவலையின்றி வேலையை தொடருங்கள். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில், வியாபாரம், வெற்றிகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை எனப்படும்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல சாதகமான பலன் கிடைக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் சேரும். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். தீடீரென வரும் எதிர்ப்புகள் அகலும்.

கலைத்துறையினருக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். அரசியல்வாதிகள் வீணாக வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. சக மாணவர்களின் வேலைகளையும் நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: சிவாலயத்திற்கு சென்று நமசிவாய மந்திரத்தை சொல்லி வாருங்கள். உங்கள் மனம் அமைதி பெறும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x