Last Updated : 27 Mar, 2024 04:40 PM

 

Published : 27 Mar 2024 04:40 PM
Last Updated : 27 Mar 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மார்ச் 28 - ஏப்.3

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: மேஷ ராசியினரே... நீங்கள் பயமின்றி பேசக்கூடியவர். இந்தக் காலகட்டத்தில் துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஏற்றத்தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடல்சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றுவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும்.

அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள்.

மாணவர்கள் எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மற்றவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.

அஸ்வினி: இந்த வாரம் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேலதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது.

பரணி: இந்த வாரம் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

கார்த்திகை: இந்த வாரம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். முன்னேற்றம் காண்பீர்கள்.

பரிகாரம்: முருகனுக்கு பால்பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: லட்சியத்தில் உறுதி கொண்ட ரிஷப ராசியினரே... நீங்கள் அவசரமாக செயல்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த காலகட்டத்தில் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சுபச்செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மையான காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர் கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கார்த்திகை: இந்த வாரம் புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் கவனமாக காரியங்களை செய்வதும் நல்லது. மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும்.

ரோகினி: இந்த வாரம் சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள்.

மிருகசிரீஷம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம்.

பரிகாரம்: அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: அபார அறிவாற்றலும், ஆராய்ச்சி நோக்குடன் எதையும் பார்க்கும் குணமுடைய மிதுன ராசியினரே... இந்த காலகட்டத்தில் பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல் திறன் அதிகரிக்கும். மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும்.

அரசியல்வாதிகள் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கலைத்துறையினருக்கு கடினமான முயற்சி செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

மிருகசிரீஷம்: இந்த வாரம் வீண்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது.

திருவாதிரை: இந்த வாரம் எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சினைகளில் நல்ல முடிவு கிடைக்கும். சிக்கலான வேலைகளை முடிக்க எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தடை தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிலும் கவனம் தேவை.

புனர்பூசம்: இந்த வாரம் பிரச்சினைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்க முன்ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x