Published : 29 Jun 2020 03:19 PM
Last Updated : 29 Jun 2020 03:19 PM

திருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


திருவோணம் -
மன உறுதியோடு பல சாதனைகளை செய்யக்கூடிய வாரம்.
வருமானம் பல மடங்காக இருக்கும். செலவுகளும் அதற்கேற்றாற் போலவே இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சகோதர ஒற்றுமை நீடிக்கும்.
வருமானத்தில் கடுமையான சிக்கல்களை சந்தித்து வந்த ஒரு சிலருக்கு இந்த வாரம் பொருளாதார பிரச்சினைகள் தீரும்படியான வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் பதவி மாற்றம் போன்றவை ஏற்படும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்குத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஒரு சில பெண்களுக்கு மனதில் தேவையற்ற அச்சம் தோன்றும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். சொத்து தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானத்திற்கு குறை இருக்காது.தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார நிமித்தமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பாக வருமானம் உண்டாகும்.

புதன் -
அலைச்சல்களும் அதனால் உடல்நலக் குறைவும் ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. வீண் செலவுகள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் மந்தமான நிலை இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இருக்காது.

வியாழன் -
புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் தொழில் அல்லது வியாபார ஆதாயம் கிடைக்கும். நன்மைகள் பலவாறாக கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டும். பணத்தைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பது கூடாது.

சனி -
சங்கடங்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நெருங்கிய உறவினர்களால் பண உதவி கிடைக்கும்.

ஞாயிறு -
வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் ஏற்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களால் ஆதாயம் தரும் செய்தி கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும்.
******************


அவிட்டம் -
பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது அதிர்ஷ்ட வாய்ப்பாக உத்தியோகம் அல்லது தொழில் வாய்ப்புகள் அமையும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
அலுவலகப் பணிகளில் மனநிறைவு தருவதாக இருக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைத்தும் அரசு வழியில் இதுவரை இருந்த நெருக்கடிகள் முற்றிலுமாக விலகும்.
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியம் உருவாகும். இரண்டாவது குழந்தைக்கான வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது. கலைஞர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் தீரும்.

இந்த வாரம் -

திங்கள் -
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

செவ்வாய் -
நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். வருமானம் பல மடங்காக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய விஷயங்கள் பற்றிய செய்தி மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

புதன் -
நீண்ட நாளாக மனதை வருத்திக் கொண்டிருந்த கடன் பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். அரசு வழியில் இருந்த நிர்ப்பந்தங்கள் விலகும். சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும்.

வியாழன் -
அலுவலகப் பணியில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தகவல் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தரகு மற்றும் கமிஷன் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் ஏற்படும். புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

சனி -
அலைச்சல் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். அலுவலகத்தில் சக ஊழியரால் மனக் காயம் ஏற்படும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஐயப்பன் வழிபாடு செய்யுங்கள். ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஆரோக்கியம் சீராகும். வருமானம் பெருகும்.
**************************************


சதயம் -
நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
வருமானம் இருமடங்காக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தந்தைவழி உறவினர்களால் நன்மைகள் நடக்கும். சொத்துப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் சுமுகமாகப் பேசி முடிவு எடுக்கப்படும்.
தாய் தந்தை உடல் நலம் திருப்திகரமாக இருக்கும். இதுவரை இருந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியை தரும். தொழில் தடைகள் நீங்கும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் அல்லது வியாபார இடத்தை இடமாற்றம் செய்யக் கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது. பெண்களுக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான விஷயங்கள் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியைக் கொடுக்க கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தாய்மாமன் வகை உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன் -
உதாரணமாக செயல்பட வேண்டிய நாள். பொறுமை மிக மிக அவசியம். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமாக இருங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.

வியாழன் -
நல்ல சம்பவங்கள் அதிகமாக ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கிடைக்கின்ற செய்திகள் அனைத்தும் நற்செய்திகளாகவே இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

வெள்ளி -

இயல்பான நாளாக இருக்கும். பெரிய மாற்றங்கள், சம்பவங்கள் ஏதும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை தொடரும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகலாம். சிக்கன நடவடிக்கை தேவை.

சனி -
தாமதமாகிக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இன்று விறுவிறுப்பாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ஞாயிறு -
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. கையாளும் பொருட்களில் எச்சரிக்கை உணர்வு அவசியம். கடன் வாங்குவதும் கொடுப்பதும் கூடாது. பேச்சில் நிதானம் தேவை.

வணங்க வேண்டிய தெய்வம் -
துர்கை வழிபாடு செய்யுங்கள். அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள், தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x