Published : 30 Mar 2020 09:40 AM
Last Updated : 30 Mar 2020 09:40 AM
- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
ரோகிணி -
பெருமளவு நன்மைகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
பணியிலிருந்த அழுத்தங்கள் படிப்படியாக விலகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் படிப்படியான சீரான வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள், கலை சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
புதிய எண்ணங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட எண்ணுவீர்கள். பால்யகால நண்பர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை கையாளுவீர்கள். பெண்கள் தாங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகளும் ஆதரவும் கிடைக்கும்.
செவ்வாய்-
எந்த ஒரு விஷயத்திலும் விழிப்பு உணர்வு தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நாம் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லையே என்ற ஆதங்கமும் எரிச்சலும் அதிகமாகும். பொறுமையாக இருக்க வேண்டும்.
புதன்-
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும்.
வியாழன்-
பலரும் உங்களிடம் உதவிகள் கேட்டு வருவார்கள். நீங்களும் உங்களாலான உதவிகளைச் செய்து தருவீர்கள். குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
வெள்ளி-
எந்தக் காரணத்தைக் கொண்டும் பயணங்களை செய்ய வேண்டாம். கடன் வாங்காதீர்கள். உங்கள் எரிச்சலையும் கோபத்தையும் குழந்தைகளிடமும் வாழ்க்கைத்துணையிடமும் காட்ட வேண்டாம். மனசஞ்சலம் ஏற்படுத்தும் தகவல் கிடைக்கும்.
சனி-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.
ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.
வணங்கவேண்டிய தெய்வம்-
விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். தேவைகள் பூர்த்தியாகும். மனநிம்மதி உண்டாகும்.
***************************************************************
மிருகசீரிடம் -
தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும். மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும். அலுவலக பணியில் இருந்த அச்ச உணர்வு நீங்கும். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். குடும்ப உறவுகள் பலப்படும். ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் குடும்ப ஒற்றுமைக்கு குறைவிருக்காது. பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். மாணவர்கள் புதிய கல்வி கற்கும் ஆர்வமும் புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வமும் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள்-
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சர்ச்சைகள் ஓயும். மனநிறைவு ஏற்படும் நாள்.
செவ்வாய்-
எதிர்காலத் திட்டங்களை வகுப்பீர்கள். குடும்ப நலன் கருதி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மைகள் பெருகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
புதன்-
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.
வியாழன்-
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும்.பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள், சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.
வெள்ளி-
பலரும் பதவிகள் கேட்டு வருவார்கள். நீங்களும் உங்களால் ஆன உதவிகளைச் செய்து தருவீர்கள். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மன குழப்பங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும்.
சனி-
கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஞாயிறு-
வீட்டிலேயே குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள். பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்-
சௌந்தர்யலஹரி பாராயணம் செய்யுங்கள் அல்லது இசை வடிவில் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் தீரும். மனம் தெளிவாகும்.
***********************************************************
திருவாதிரை -
தேவையில்லாமல் மனதைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு மன உளைச்சல் இருக்கும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து விடுங்கள். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். அதில் தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். பெண்கள் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பப் பிரச்சினைகளில் நிதானமாக இருப்பது நல்லது. மாணவர்கள் சக நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த வாரம் -
திங்கள்-
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் தரும்படியான தகவல் கிடைக்கும்.
செவ்வாய்-
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.
புதன்-
மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். தேவையில்லாத கற்பனைகள் மனதில் தோன்றும். மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.
வியாழன்-
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.
வெள்ளி-
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சு வார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளிடம் அன்பு பாராட்டுங்கள். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வார்த்தை போர் வைத்துக்கொள்ள வேண்டாம்.
சனி-
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் சமாதானம் ஆகும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும்.
ஞாயிறு-
குழந்தைகளின் கல்வி பற்றிய அக்கறை தோன்றும். அவர்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் புது முயற்சிகள் எடுப்பீர்கள். வீட்டில் தேவையில்லாத பொருட்களை அனைத்தையும் ஒதுக்கி வைப்பீர்கள். பழுதான பொருட்களை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்-
கால பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனக் குழப்பங்கள் தீரும் .
************************************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment