Published : 15 May 2023 05:35 AM
Last Updated : 15 May 2023 05:35 AM
மேஷம்: பிள்ளைகள் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகள் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
ரிஷபம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வருங்கால வளர்ச்சிக்கு தேவையான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
மிதுனம்: தைரியமாக முடிவெடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு கூடும்.
கடகம்: தேவையற்ற அச்சம், கவலை, மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங் களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டி ருக்க வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். வெளி வட்டாரத்தில் நிதானம் அவசியம்.
கன்னி: பணப் பற்றாக்குறை நீங்கும். மனதுக்கு பிடித்த வர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் பல வகையிலும் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும்.
துலாம்: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பழுதான வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். பிள்ளை களின் உடல்நலம் சீராகும். காசு பணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.
தனுசு: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். வீண், ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள்.
மகரம்: தடைகளை பொருட்படுத்தாமல் உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளின் அடிமனதில் இருப்பதை தெரிந்துகொள்வீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.
மீனம்: தாழ்வு மனப்பான்மைக்கு இடம்தராமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT