Published : 09 Sep 2021 01:31 PM
Last Updated : 09 Sep 2021 01:31 PM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். தேங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும்.
தொழில், வியாபாரம் முன்னேற்றமாக காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள்.
குடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். கலைத்துறையினருக்கு மனக் குழப்பம் நீங்கும். அரசியல்வாதிகள் பிறருடன் பழகும்போது நிதானம் தேவை.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
பரிகாரம்: தினமும் ஆதிபராசக்தியை 11 முறை வலம் வர தொழில் மாற்றம் ஏற்படும். நிம்மதி கிடைக்கும்.
***************************************************************************************
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சூர்யன் - தனவாக்கு ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
இந்த வாரம் சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.
நீங்கள் நினைப்பதுபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் - அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.
குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடம் கனிவாக இருக்கும். மாணவர்கள் திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து மனதில் இருக்கும் குழப்பங்கள் அகலும்.
***************************************************************************************
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
ராசியில் புதன், செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயனசயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை உள்ளது.
இந்த வாரம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்தக் காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள்.
கலைத்துறையினருக்கு புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளில் ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
பரிகாரம்: தினமும் பெருமாளை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.
***************************************************************************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT