Published : 08 Oct 2020 10:25 AM
Last Updated : 08 Oct 2020 10:25 AM

கடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்; அக்டோடர் 8 முதல் 14ம் தேதி வரை


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணம் உடைய கடக ராசி அன்பர்களே.

இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும்.

வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும்.

பெண்கள், அடுத்தவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பீர்கள். பொறுப்புகள் கூடும்.

கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் திருப்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: துர்கை அம்மனை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். எதிர்ப்புகள் விலகும். காரியத் தடை நீங்கும்.
***************************************

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

பிறரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே.

இந்த வாரம் நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன் கவனமாகப் பேசுவது நல்லது.

குடும்ப ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியன் இருக்கிறார். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்களுக்கு திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கலைத்துறையினர் தொடர் பணிகளால் களைப்படைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். குழப்பம் தீரும்.
*********************

கன்னி

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

மனதில் கொண்ட குறிக்கோளை அடையும் வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் கன்னி ராசி அன்பர்களே!

இந்த வாரம் சில சங்கடங்கள் நேரலாம். கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியைச் செய்வது போன்றவையும் வந்து சேரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும்.
பெண்களுக்கு செலவு உண்டாகும். கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். மாணவர்களுக்கு எந்தவொரு பாடத்தைப் படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: பைரவரை புதன்கிழமைதோறும் வணங்கி வாருங்கள். திருமணத் தடைகள் நீங்கும். செல்வம் சேரும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x