Published : 01 Oct 2020 06:35 PM
Last Updated : 01 Oct 2020 06:35 PM

துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள் (அக்டோபர் 1 முதல் 7ம் தேதி வரை)

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும்.

எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.

வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. உங்கள் மீது இருந்து வந்த குற்றச்சாட்டுகள் அகலும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பெண்களுக்கு நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

கலைத்துறையினருக்கு பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தெற்கு
எண்கள்: 2, 5, 6
நிறங்கள்: வெள்ளை
பரிகாரம்: வேல்முருகனை வழிபட்டு வாருங்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்யலாம். செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். தடைகள் அகலும்.
***************************************

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

இந்த வாரம் நீங்கள் எடுத்த பணியினை முடித்து விட்டுத்தான் அடுத்த வேலைகளை பார்ப்பீர்கள்.

எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையைச் சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணக்கோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவுகள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தப்பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம்.
பெண்களுக்கு சமாளித்து முன்னேறும் திறமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும்.

அரசியல்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன்க்ளைத் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, கிழக்கு

எண்கள்: 3, 9

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்: தினமும் சிவன் கோயிலுக்குச் சென்று, தீபமேற்றி வழிபடுங்கள். சகல நன்மைகளும் நடக்கும்.
*****************************************


தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் வேகத்தைக் காட்டாமல் விவேகத்துடன் செய்வது நல்லது. நீண்ட நாட்களாக தீட்டி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

மேலிடத்துடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும். குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் இறுக்கமான சூழ்நிலை அகலும்.

பெண்கள் அதிக அளவில் உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். அரசியல்துறையினருக்கு கடன் பிரச்சினை குறையும்.

மாணவர்களுக்கு கவனத்தைச் சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களைப் படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.


அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

எண்கள்: 1, 3

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு

பரிகாரம்: ஸ்ரீலக்ஷ்மி நாராயணரை வழிபடுவது நல்லது. லக்ஷ்மி நரசிம்மரை வணங்குங்கள். பசுவிற்கு ஆகாரம் கொடுப்பது நல்லது.
*************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x