Published : 06 Aug 2020 11:27 AM
Last Updated : 06 Aug 2020 11:27 AM

மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதை நிதானமாக செய்து வெற்றி பெறும் மகர ராசியினரே.
நீங்கள் எப்போதும் நியாயத்தின் பக்கம் இருக்க விரும்புபவர்கள். இந்த வாரம் சுக்கிரன் சஞ்சாரத்தால் எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரியத் தடைகள் வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலகப் பணிகளில் தாமதம் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வியிலும் அவர்களது செயல்களிலும் கவனம் செலுத்துவீர்கள்.

பெண்களுக்கு எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.

அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள்சாதம் வைப்பது உடல் ஆரோக்கியத்தைத் தரும். கஷ்டங்கள் குறையும்.
**********************************************

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் கும்ப ராசியினரே.

நீங்கள் உழைப்பதின் மூலம் முன்னுக்கு வர வேண்டும் என விரும்புபவர்கள். இந்த வாரம் கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம்.

தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது வியாபார மேன்மைக்கு உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும்.

எவரிடமும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்குவதால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
********************************************************

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எந்தக் காரியத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுக்க தெரிந்த மீனராசியினரே.
நீங்கள் மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். அறிவுத் திறமை வெளிப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும்.

வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாகப் பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும்போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பணவரவு திருப்தி தரும்.

எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்மை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: குலதெய்வத்தையும் குரு பகவானையும் வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
***************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x