Published : 23 Jul 2020 10:06 AM
Last Updated : 23 Jul 2020 10:06 AM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
எடுத்துக் கொண்ட காரியத்தில் தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே.
இந்த வாரம் வெகுகாலமாக இருந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். மனதுக்கு சந்தோஷம் தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்களும் இதுவரை இருந்த ஆடம்பர செலவினங்களைத் தவிர்ப்பீர்கள். தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்கலச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.
தொழிலதிபர்கள் உணவுப்பொருள் உற்பத்தி செய்பவர்கள் நிறைவான விளைச்சல் காரணமாக புதிய சந்தை வசதிகளையும் அதிக பொருளாதார வரவுகளையும் பெறுவார்கள்.
பெண்கள் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்வார்கள். பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் தொழிலில் மேன்மை பெறுவார்கள். கலைத்துறையினர் தங்கள் தொழிலில் மிகுற்த அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான பொருளாதாரமும் அதிகமான புகழும் பெறுவார்கள்.
அரசியல்வாதிகள் நற்செயல்களின் வெளிப்பாடுகள் அதிகரித்து உயர்வைப்பெற்று புகழ் பெறுவீர்கள். மாணவர்கள், தங்களது படிப்பினால் உயர்ந்த மதிப்பெண் பெற்று தகுதியான பணிகளைச் செய்கிற சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்
எண்கள்: 5, 7, 9
பரிகாரம்: முருகன் வழிபாடு இன்னும் உங்களை உயர்த்தும். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
அனைவராலும் விரும்பப்படும் ரிஷப ராசி அன்பர்களே.
இந்த வாரம் மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்குத் திரும்ப கிடைக்கும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் துறை சார்ந்த பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும்.
வியாபாரிகள், பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள்.
பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். கலைத்துறையினர் ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள்.
அரசியல்வாதிகள் எதிர்காலக் கனவுகளை மனதில் சுமந்து புதிய உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: பெருமாள் வழிபாடு பலம் சேர்க்கும். துளசி தீர்த்தம் பருகி, விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
வாழ்க்கையில் வளமும் நலமும் அதிகம் பெறும் மிதுன ராசி அன்பர்களே.
இந்த வாரம் செயல்படாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையான செயல்பாட்டுக்கு வந்து விடும். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழுக் காரணமாக இருச்கும்.
பொருளாதாரத்தில் தகுந்த உயர்வு உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூலப் பயன்கள் உண்டாகும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப்படுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள், அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.
தொழிலதிபர்கள் நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். வியாபாரத்தில் உயர்வு பெறுவார்கள். பெண்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணம் ஆன பெண்கள் நிறைவான வகையில் சந்தான பாக்கியம் அடையலாம்.
கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள்.
அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகளோடு தங்கள் வாழ்க்கைக்கு தேவையான சுக சவுகரியங்களைப் பெற வேண்டிய ஏற்பாடுகளையும் செயல்படுத்துவீர்கள். மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவார்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: மகாவிஷ்ணு வழிபாடு வளமும் பொருளும் தரும்.
****************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT