Published : 16 Jul 2020 08:59 AM
Last Updated : 16 Jul 2020 08:59 AM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்:
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள்.
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள்.
திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் இழுபறியாக இருக்கும்.
குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு அலுவலகத்தில் தேவையில்லாத படபடப்பு ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். கலைத்துறையினர் எந்த காரியத்திலும் திட்டமிடுதல் அவசியம். அரசியல்வாதிகள் முடிவெடுக்கும்போது ஆலோசனை அவசியம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, பழுப்பு
எண்கள்: 1, 9
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் சிவனுக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும்.
----------------------------------------------------
ரிஷபம்:
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் சஞ்சரிக்கிறார்.
நல்ல யோகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துகள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும்.
தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். உத்தியோகத்தில் வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைப்பது நல்லது.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு மனதில் ஏதாவது கவலை வந்து வாட்டும். அரசியல்துறையினருக்கு புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறையக் கூடும். கவனம் சிதறாமல் படிப்பது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
----------------------------------------------------
மிதுனம்:
இந்த வாரம் குரு பார்வை உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது.
வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனத் திருப்தியுடன் செயலாற்றுவீர்கள்.
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். பாராட்டு கிடைக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.
பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, சிவப்பு
எண்கள்: 1, 5
பரிகாரம்: புதன்கிழமை அன்று சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை உள்ளிட்ட சகல தடைகளும் நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT