Published : 11 Jun 2020 09:07 AM
Last Updated : 11 Jun 2020 09:07 AM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்:
குடும்பத்தில் அதிக பற்றுடன் நடந்து கொள்ளும் மகர ராசியினரே.
இந்த வாரம் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரப் போட்டிகள் குறையும். எல்லாத் துறைகளிலும் லாபம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்கள் எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: நீலம், கரும்பச்சை
எண்கள்: 5, 7
பரிகாரம்: காகத்திற்கு அன்னமிட்டு வாருங்கள். முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.
*************************************************************************************
கும்பம்:
எந்தக் காரியத்திலும் லாப நோக்கத்துடனேயே செயல்படும் கும்பராசியினரே.
இந்த வாரம் நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரியத் தடங்கலை ஏற்படுத்தும்.
அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களைக் குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். வார தொடக்கத்தில் கோபத்தைத் தவிர்த்து பேசுவது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
உத்தியோகஸ் தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர் களுக்கு வேலை கிடைக்கலாம்.
பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளைச் செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கவனமுடன் படிப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, கிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: தினமும் காலை காகத்திற்கு சாதம் வைத்து முன்னோர்களை நினைத்து வணங்கி வருவது நன்மை தரும். மகாவிஷ்ணுவை வழிபடுங்கள்.
*************************************************************************************
மீனம்:
உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மீனராசியினரே.
இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டா கும்.
உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். வார இறுதியில் பண வரத்து குறையும்.
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும்.
குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம்.
தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.
உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.
பெண்களுக்கு எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். மாணவர்கள், கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 7
பரிகாரம்: சப்த கன்னியர் வழிபாடு நடத்தி வாருங்கள். நினைத்த காரியங்கள் கை கூடும். குறிப்பாக, வாராஹியை வழிபடுங்கள்.
*****************************************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT