Published : 11 Jun 2020 08:41 AM
Last Updated : 11 Jun 2020 08:41 AM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்:
மற்றவர்கள் மேல் இரக்க குணமுடைய துலா ராசியினரே.
இந்த காலகட்டத்தில் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.
எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம், கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துப் பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம்.
வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதுர்யத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
பெண்கள் எந்த ஒரு காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை மனதால் துதித்து வழிபட எல்லாப் பிரச்சினைகளும் தீரும்
**************************************************
விருச்சிகம்:
உறவினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விருச்சிக ராசியினரே.
இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் வார மத்தியில் விலகும்.
நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
வியாபாரப் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்.
பெண்கள், எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 9
பரிகாரம்: திருவருட்பா படியுங்கள். குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள் தீரும்.
*************************************************
தனுசு:
கற்ற வித்தையை சரியாக பயன்படுத்த துடிக்கும் தனுசு ராசியினரே.
இந்த வாரம் எண்ணிய காரியம் ஈடேறும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். எப்படிப்பட்ட சிக்கல்களை யும் தீர்க்கும் வல்லமை ஏற்படும்.
அடுத்தவருக்கு உதவி செய்து அதன் மூலம் மதிப்பு உயரும். அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப் படும். வார இறுதியில் வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
கணவன், மனைவிக்கிடை யில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம் பக்கத்தினரி டம் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நாட்டம் உண்டாகும். ஆனால் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 3, 6, 7
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை தியானம் செய்து வழிபட நன்மைகள் ஏற்படும்.
*****************************************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT