Last Updated : 16 Dec, 2023 05:07 PM

3  

Published : 16 Dec 2023 05:07 PM
Last Updated : 16 Dec 2023 05:07 PM

புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - பொதுப்பலன் | ஒரு பார்வை

எண்ணியது இனிதாய் நடக்கப் போகும் 2024ம் புத்தாண்டு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீசோபக்ருத் வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 15ம் தேதி பின்னிரவு 16ம் தேதி முன்னிரவு, 01 ஜனவரி 2024, திங்கட்கிழமையும் க்ருஷ்ணபக்ஷ பஞ்சமியும் மகம் நடத்திரரமும் ப்ரீதி நாமயோகமும் கவுலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12 மணிக்கு கன்னியா லக்னத்தில் ரிஷப நவாம்சமும் மகர திரிகோணமும் கொண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

மகம் நட்சத்திரம் சிம்ம ராசி கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சீரும் சிறப்புடனும் - ஆயுசுடனும் - ஆரோக்கியத்துடனும் - அனைத்து விதமான ஷேமங்கள் பெறவும் - திருமணம் கைகூடி வரவும் - சந்தாண பாக்கியம் கிட்டவும் - நல்ல வேலை கிடைக்கவும் - வெளிநாடு பயணம் இனிதே பெறவும் - வீடு மனை வாகனம் அமையவும் ஆண்டின் தொடக்க நாளில் இறைவனை திருக்கோவில்களில் சென்று வழிபாடு செய்து வருவது நல்லது.

இந்த ஆண்டு சிவனுக்கும் விநாயகருக்கும் உகந்த நக்ஷத்ரமான ஸ்வாதி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும் போகமும் செல்வாக்கும் சொல்வாகும் இன்னும் பெருகும். கன்னியர்களின் கவலைகள் தீரவும் - காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும் - எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் தைரிய ஸ்தானத்தில் இருக்கும் லக்னாதிபதி புதனுக்கு உகந்த தேவதையான ஸ்ரீமன் நாராயணனையும் - மகம் நட்சத்த்ரத்திற்கு உகந்த தேவதையான விநாயகரையும் வணங்கி வர அனைத்தும் நிறைவேறும். புத்தாண்டின் கிரகநிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவக்கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷங்களை அள்ளித்தரும் கிரக அமைப்பில் இருப்பது நன்மையே.

கிரகநிலை: லக்னம் கன்னி - தைரிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்களுடைய உலா இருக்கிறது.

சனியின் ஆதிக்கம் பெற்ற எண் 2024: இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 4 = 8. எட்டு என்பது ராகுவின் ஆதிக்கம் பெற்ற எண். துர்க்கைக்கும் வாராகி தேவிக்கும் உகந்த எண் நான்காகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி புதன் தைர்ய ஸ்தானத்தில் சுயசாரம் பெற்றிருக்கிறார். லக்ன தொழில் அதிபதி புதனும் பஞ்சம ரண ருணாதிபதி சனியும் கேந்திரம் பெற்றிருக்கிறார்கள். குடும்பாதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில்காரகனான சனி ரண ருண ரோக ஸ்தானத்தில் தைரிய அஷ்டமாதிபதி சாரம் பெற்றிருக்கிறார். தொழில் வளர்ச்சி அடையும். பங்குசந்தைகள் நல்ல வளர்ச்சி காணும். பணம் சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் மெல்ல மெல்ல சரியாகும்.

இந்த ஆண்டு நடைபெறும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலைமை உச்ச நிலைக்கு செல்லும். ரியல் எஸ்டேட் துறை படிப்படியாக முன்னேற்றம் அடையும். அதிகமான திருமணங்கள் நடைபெறும். குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாகும். பல கோவில்களுக்கு புனரமைப்பு பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கம் ரீதியாக பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து அதிகமான பிரச்சினைகள் ஏற்படலாம். ராணுவம் பலம் பெற்று நாட்டைக் காப்பாற்றும். மழை வளம் சிறப்பாக இருக்கும்.

இந்த ஆண்டு நடைபெறும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் - வாக்கிய பஞ்சாங்கப்படி...

குருப் பெயர்ச்சி: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீகுரோதி வருஷம் சித்திரை மாதம் 18ம் நாள் (01.05.2024) சனிக்கிழமை அன்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் கன்னியா ராசியையும் - ஏழாம் பார்வையால் விருச்சிக ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் மகர ராசியையும் பார்க்கிறார். இந்த வருடம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x