Published : 29 Oct 2020 01:08 PM
Last Updated : 29 Oct 2020 01:08 PM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
எளிதில் எவருடனும் நண்பராகும் திறமை பெற்ற மிதுன ராசியினரே!
இந்த மாதம் ராசிநாதன் புதன் சஞ்சாரம் உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்தவொரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாகவே கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டும். கவனமாக அதைத் தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல், செலவு ஏற்படலாம். பயணங்களின்போது எச்சரிக்கை தேவை.
தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்த்து அனுசரித்துப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.
குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளிப் போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.
பெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும் செலவும் உண்டாகலாம், கவனம் தேவை.
கலைத்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பயணத்தில் எதிர்பாராமல் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர்ப் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.
அரசியல்துறையினருக்கு உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளைச் செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவார்கள்.
திருவாதிரை:
இந்த மாதம் உயர் பதவிகளும் கிடைக்கக் கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதைக் கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலைத் தரும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எல்லாப் பிரச்சினைகளும் சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். வீண் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தைக் குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்தவொரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி வாருங்கள். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15
~~~~~~~~~~~~~~~~~~~
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT