Last Updated : 01 Apr, 2025 05:38 PM

 

Published : 01 Apr 2025 05:38 PM
Last Updated : 01 Apr 2025 05:38 PM

துலாம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), சூரியன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்: 07-04-2025 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 10-04-2025 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-04-2025 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-04-2025 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: கூர்மையான தராசு என்பதற்கேற்ப புத்தியோசனையுடனும் அதே வேளையில் கவர்ச்சியாகவும் பேசி அனைவரிடமும் காரியங்களை சாதித்துக் கொள்ளும் துலாம் ராசி அன்பர்களே... இந்த மாதம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகள் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும். நல்ல செய்கைகளினால் மட்டுமே புகழை தக்க வைக்க முடியும். வீடு மனை வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கி தலைகுனிந்து திரும்பி போய்விடுவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலைகள் உருவாகும். தனியார்துறை ஊழியர்கள் தெய்வ பலத்தை நம்புங்கள். பொருளாதாரம் சரளமாக கிடைக்கும். இருக்கும் புகழை தக்க வைக்க நேரம் சரியாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு தகுந்த பொருளாதாரம் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடந்த காலங்களில் ஆதாயமாய் கிடைத்த பொருளாதாரம் சுபமங்களச் செலவுகளை உருவாக்கித் தரும்.

பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் கை சேமிப்பை குடும்பச் சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் மார்க்கங்கள் நிரம்பவே உண்டு. கலைத்துறையினர் சிறந்த சாதனை படைத்து பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். மனம் ஆன்மிக வழியை அதிகம் நாடும். பேசும் வார்த்தைகளில் அனல் வீசும். நற்செயல்கள் செய்வதினால் புகழ் பலம் பெறுவீர்கள்.

அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்லநிலை ஏற்படும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. மாணவர்கள் மெக்கானிக்கல் பயிற்சிபெறும் மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். ஆயுள் பலம் பெறும். தந்தை மகன் உறவு சீராக இருக்கும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த மாதம் தொழிலில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ராசிநாதன் சந்திரனின் சஞ்சாரத்தால் எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

சுவாதி: இந்த மாதம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சகஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன்தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குலதெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30 | அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x