Last Updated : 30 Sep, 2024 05:55 PM

 

Published : 30 Sep 2024 05:55 PM
Last Updated : 30 Sep 2024 05:55 PM

மேஷம் முதல் மீனம் வரை: அக்டோபர் மாத பலன்கள் @ 2024

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்): இந்த மாதம் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு மூன்றாம் இடமான மிதுனத்தில் சஞ்சாரம் செய்வது நன்மையை தரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவியிறக்கம் ஆகியவைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கிவர எல்லா பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும் |அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - செவ்வாய் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 7, 8 | அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28 |முழுமையான பலன்களுக்கு > மேஷம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் | 2024

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்): இந்த மாதம் ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் வேகம் ஏற்படும். முயற்சிகள் கைகூடும். பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளை சமாளிப்பீர்கள். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.

கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு தைரியம் தன்னம்பிக்கை ஏற்படும். மேலிடத்துடன் இருக்கும் உரசல்கள் அகலும். மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கிவர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும் |அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 9, 10 | அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30, 31 | முழுமையான பலன்களுக்கு > ரிஷபம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் | 2024

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்): இந்த மாதம் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். பேச்சில் கடுமை அதிகரிக்கலாம். மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பொருளாதார நிலை உயரும். அரசியல்துறையினருக்கு எடுக்கும் காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13 | அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 6 | முழுமையான பலன்களுக்கு > மிதுனம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் | 2024

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்): இந்த மாதம் நல்ல பலன்கள் வரும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சில நேரங்களில் அவசரத்தன்மை ஏற்படலாம். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும்.

உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு சுபச்செலவுகள் ஏற்படும். கலைத்துறையினருக்கு மந்தமான காரியங்கள் வேகமெடுக்கும். அரசியல்துறையினருக்கு சுபச்செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 14, 15 | அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8 | முழுமையான பலன்களுக்கு > கடகம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் | 2024

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்): இந்த மாதம் ராசிநாதன் சூரியன் தனஸ்தானத்தில் இருக்கிறார். வீண்கவலை அகலும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டார தொடர்புகளினால் நன்மைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் இருந்த தடங்கல்கள் நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம்.

கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். பெண்களுக்கு கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சுபச்செலவுகள் ஏற்படும். கலைத்துறையினருக்கு எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக நடக்கும். அரசியல்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மனஅமைதி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 16, 17 | அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10 | முழுமையான பலன்களுக்கு > சிம்மம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் | 2024

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்): இந்த மாதம் ராசிநாதன் புதன் ராசிக்கு வருகிறார். அனைவரும் உங்களிடம் நேசமுடன் பழகுவார்கள். மற்றவர்களால் இருந்த மனகஷ்டம் அகலும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் வேகமாக நடக்கும். எதிர்ப்புகளை சிறப்பாக சமாளிப்பீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவுத்திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். பெண்களுக்கு சுபச்செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் அகலும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வரும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: வாராகி தேவியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் | சந்திராஷ்டம தினங்கள்: 18, 19 | அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13 | முழுமையான பலன்களுக்கு > கன்னி ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் | 2024

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்): இந்த மாதம் உங்கள் மன உறுதி அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் ராசியில் பயணிக்கிறார். இதனால் பணவரவு அதிகமாகும். குரு பார்வையால் சுபச்செலவு உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.

குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும். | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 20, 21 | அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15 | முழுமையான பலன்களுக்கு > துலாம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் | 2024

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை): இந்த மாதம் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் ஏற்படும். ராசிக்கு 11ல் சூரியன் இருப்பதால் எண்ணியதை செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். அரசியல்துறையினருக்கு முன் திட்டமிடல் எதிலும் அவசியம். மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும். | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 22, 23 | அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17 |முழுமையான பலன்களுக்கு > விருச்சிகம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் | 2024

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்): இந்த மாதம் ராசியாதிபதி குரு ராசிக்கு ஆறில் வக்கிரம் பெற்று சஞ்சாரம் செய்வதால் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். ராசிக்கு ஏழில் செவ்வாய் சஞ்சாரம் இருப்பதால் பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு பொருளாதாரம் மேன்மை காணப்படும். அரசியல்துறையினருக்கு காரியங்கள் வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

பரிகாரம்: சிவபெருமானை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும். | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - செவ்வாய் - வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26 | அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19 | முழுமையான பலன்களுக்கு > தனுசு ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் | 2024

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்): இந்த மாதம் யோககாரகன் சுக்கிரன் மிக அனுகூலமாக இருக்கிறார். வீண்செலவுகள் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். எனவே முன் திட்டமிடல் அவசியம். கொடுத்த வாக்கை காப்பாற்ற எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு யோகம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு எதிலும் கவனம் தேவை. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் சாதம் நைவேதியம் செய்ய காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28 | அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21 | முழுமையான பலன்களுக்கு > மகரம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் | 2024

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்): இந்த மாதம் சுகஸ்தான ராசியில் குரு பகவான் வக்ரமாக இருக்கிறார். குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம்.

போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலைப்பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை அகலும். மனதில் இருப்பதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டீர்கள். ராசிக்கு 5ல் செவ்வாய் - 09ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்கிறார்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும். கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காணப்படும். பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். கலைத்துறையினர் எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும். | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் | சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30, 31 | முழுமையான பலன்களுக்கு > கும்பம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் | 2024

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி): இந்த மாதம் நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள்.

மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு முயற்சிகள் நல்ல பலன் தரும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல் துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 6 | அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26 | முழுமையான பலன்களுக்கு > மீனம் ராசிக்கான அக்டோபர் மாத பலன்கள் | 2024

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x