Last Updated : 27 Apr, 2024 04:22 PM

1  

Published : 27 Apr 2024 04:22 PM
Last Updated : 27 Apr 2024 04:22 PM

கன்னி ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் புதன், ராகு, செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு, சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 01-05-2024 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 07-05-2024 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-05-2024 அன்று சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 20-05-2024 அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 24-05-2024 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 31-05-2024 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஊண், உறக்கம் இன்றி கடுமையாக உழைக்கும் கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் ஏற்படும்.

குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு சீரான நிலை இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களைப் பற்றி புறம்பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபட உதவும் மாதமிது. உற்பத்திச் சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வின்றி தொழில் நடைபெறும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டிய காலகட்டமிது.

அஸ்தம்: இந்த மாதம் பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டும். மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த மாதம் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. எதிர்கால படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம். குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது.

பரிகாரம்: ஏதேனும் ஒரு காவல் தெய்வத்தை புதன்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை நீங்கும் | சந்திராஷ்டம தினங்கள்: 07, 08 | அதிர்ஷ்ட தினங்கள்: 01, 02, 28, 29

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x