Published : 21 Apr 2023 05:37 AM
Last Updated : 21 Apr 2023 05:37 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். புதிய வீடு கட்ட திட்டமிடு வீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மன அமைதி பெற தியானம் செய்யவும்.

மிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பணபலம் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினையில் தெளிவு பிறக்கும்.

கடகம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்கு வீர். பழையவற்றை நினைத்து கவலை வேண்டாம்.

சிம்மம்: குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். கலை பொருட்கள் சேரும்.

கன்னி: பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்கு கொடுத்த சிலரால் பிரச்சினை ஏற்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் சில மனத்தாங்கல் இருக்கும்.

துலாம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார் கள். அநாவசிய விஷயங்களில் தலையிட வேண்டாம்.

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒருவரை சந்திப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.

தனுசு: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

மகரம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குலதெய்வ வழிபாடு நன்மையைத் தரும்.

மீனம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விளையாட்டாகப் பேசுவது வினையாக முடியும். எச்சரிக்கையாக இருக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x