Published : 15 Apr 2023 05:34 AM
Last Updated : 15 Apr 2023 05:34 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பேச்சில் ஒரு கம்பீரம் பிறக்கும். அனுபவ அறிவும் வெளிப்படும். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையை கண்டு எல்லோரும் அதிசயிப்பார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனோபலம் அதிகரிக்கும். அழகு, ஆரோக்கியம் கூடும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

மிதுனம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங் கள். நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கடகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் ஆதர வாலும், ஆலோசனையாலும் சிக்கல்களை முறி யடித்து வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்: தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவதற்கு முன் பணம் தருவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து பிரச்சினை, வழக்குகள் முடிவுக்கு வரும். தியானம் செய்யவும்.

கன்னி: அடிமனதில் இருந்து வந்த பய உணர்வு நீங்கும். தடைகள் விலகும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அதற்கு தகுந்தாற்போல் சில விஐபிகளும் பக்கபலமாக இருப்பர். கலை பொருட்கள் சேரும்.

துலாம்: பால்ய நண்பரின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். சொந்த - பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

விருச்சிகம்: சகோதர வகையில் உதவிகள் உண்டு. தள்ளிப் போன திருமணம் கூடி வரும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். நீண்ட நாளாக பேசாத உறவினர் ஒருவர் வந்து பேசுவார்.

தனுசு: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். அழகு, இளமை கூடும். சகிப்புத் தன்மையும் அதிகரிக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

மகரம்: யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண் டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்து வீர்கள். ஆனாலும் சிலர் உங்களைக் குறை கூறிக் கொண்டிருப்பர். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்: நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை குடும்பத்துடன் நிறைவேற்று வீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும்.

மீனம்: தன்னம்பிக்கை உண்டாகும். புண்ணிய ஸ்தலங் களுக்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x