Published : 10 Apr 2023 05:34 AM
Last Updated : 10 Apr 2023 05:34 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: யாரிடமும் பழைய கசப்பான சம்பவங்களை பேச வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

ரிஷபம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்த வர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலை களை செய்து முடிப்பீர்கள். பொருட்கள் சேரும்.

மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட் டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். எதார்த்தமான பேச் சால் அனைவரையும் கவருவீர்கள்.

கடகம்: நீண்ட நாட்களுக்கு பிறகு, குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். குலதெய்வ பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன் களை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு முக்கிய முடிவு எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலையை உடனே முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வீர்கள்.

கன்னி: இடையூறுகள், தடைகளை கடந்து, உங்கள் குறிக் கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். விருந்தினர் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பண வரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். மகான்கள், பெரியோரின் ஆசி கிடைக்கும்.

விருச்சிகம்: தாழ்வு மனப்பான்மைக்கு இடம்தராமல் நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுங்கள். அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

தனுசு: பிள்ளைகள் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருப் பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும். ஆன்மிக நாட்டம் கூடும்.

மகரம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். வருங்கால வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கும்பம்: தைரியமாக செயல்பட்டு, எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

மீனம்: தேவையற்ற குழப்பங்கள் விலகும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x