Published : 06 Apr 2023 05:34 AM
Last Updated : 06 Apr 2023 05:34 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். உறவினர் வருகையால் வீடு களை கட்டும்.

ரிஷபம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பணவரவு உண்டு.

மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். பூர்வீக வீட்டை விரிவாக்கம் செய்து கட்டி முடிப்பீர்கள்.

சிம்மம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். எனவே இன்று நிதானித்து பேசுங்கள். விஐபிகளின் நட்பு கிடைக்கும்.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். கலைப் பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும்.

மகரம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பூர்வீக வீட்டை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள். பால்ய நண்பர் உதவுவார்.

கும்பம்: அக்கம் - பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போகவும். பிறரை குறை கூறுவதை நிறுத்துங்கள். சாலையை கடக்கும்போது கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x