Published : 05 Apr 2023 05:32 AM
Last Updated : 05 Apr 2023 05:32 AM
மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். பணவரவு ஓரளவு திருப்தியாக இருக்கும்.
மிதுனம்: புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலை பொருட்கள் சேரும்.
கடகம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர் வருகையாலும் வீடுகளை கட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
சிம்மம்: மனைவிவழியில் மதிப்பு கூடும். அழகு, இளமை கூடும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைக்க முயற்சிப்பீர்கள்.
கன்னி:பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். புதுப் புது பிரச்சினைகள் முளைக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பருடன் திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
மகரம்: பிரச்சினைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் இருந்த பகை நீங்கும்.
கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வர வேண்டிய பணத்தை போராடிப் பெறுவீர்கள். புதிய பொறுப்பு தேடி வரும்.
மீனம்: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். பூர்வீக நிலங்கள் தொடர்பான பிரச்சினை தீரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT