Published : 02 Mar 2021 05:17 AM
Last Updated : 02 Mar 2021 05:17 AM
மேஷம்: இழுபறியாக இருந்துவந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வர வாய்ப்பிருக்கிறது.
ரிஷபம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமண பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.
மிதுனம்: கடந்த காலத்தில் நடந்த இனிமையான சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் எதிர்பாராமல் கருத்து வேறுபாடு வரக் கூடும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.
கடகம்: பிரச்சினைகளின் ஆணி வேரைக் கண்டறிவீர்கள். வேற்றுமொழி பேசுபவர்கள் அறிமுகம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும்..
சிம்மம்: சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள்.
கன்னி: மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முடிவுக்கு வரும்.
துலாம்: தவிர்க்க முடியாத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். சகோதரர் வகையில் அன்புத் தொல்லை உண்டு. அரசு காரியங்கள் இழுபறியாகும். திடீர் பயணம் ஏற்படும்.
விருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
தனுசு: சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீட்டு திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்: தன்னம்பிக்கை பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். யோகா, தியானம் என மனதை நிலைப்படுத்துவீர்கள்.
கும்பம்: இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்-. பிள்ளைகள் விஷயத்தில் அதிக கண்டிப்பு வேண்டாம். கலைப்பொருட்கள் சேரும்.
மீனம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT