Published : 13 Feb 2021 08:55 AM
Last Updated : 13 Feb 2021 08:55 AM
மேஷம்: உங்களின் முயற்சிக்கு குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். புது சொத்து வாங்குவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: சாதுர்யமாகச் செயல்பட்டு காரியங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்: முக்கிய விஷயங்களில் அனுபவ அறிவைப் பயன்படுத்துங்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.
கடகம்: சிறுசிறு அவமானம், வீண் விரயம் வந்து போகும். யாருக்காகவும் சாட்சி, உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
சிம்மம்: மனதில் தைரியம் பிறக்கும் வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.
கன்னி: எதிர்பார்ப்புகள் மளமளவென்று பூர்த்தியாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
துலாம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். கவுரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். யோகா, தியானத்தில் மனதை செலுத்துவீர்கள்.
விருச்சிகம்: நிர்வாகத் திறன் பளிச்சிடும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
தனுசு: வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
மகரம்: உங்கள் பேச்சில் கனிவு வெளிப்படும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கடன் தொகை வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகப் பயணம் ஏற்படும்.
கும்பம்: வேலைச்சுமை, நண்பர்களுடன் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். விருந்தினர்களின் திடீர் வருகையால் பணப் பற்றாக்குறை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.
மீனம்: வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். முன்கோபம் அடிக்கடி தலைகாட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT