Published : 12 Feb 2021 07:49 AM
Last Updated : 12 Feb 2021 07:49 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

ரிஷபம்: சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும். மகளின் திருமணப் பேச்சுவார்த்தையில் நிலவிய முட்டுக்கட்டைகள் நீங்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்: உங்களின் ரசனைக்கேற்ப வீட்டை விரிவுபடுத்துவீர்கள். சிலருக்கு அரசு பதவிகள் கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கடகம்: குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் அலட்சியப் போக்கால் சில சிக்கல்கள் வர வாய்ப்பிருக்கிறது.

சிம்மம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடி புகுவீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி: மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து அவர்களை ஒதுக்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

துலாம்: மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும்.

விருச்சிகம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தூக்கமின்மை விலகும். தாயாரின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு: இளைய சகோதரரால் சில காரியங்கள் நிறைவேறும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மகரம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சொத்து தொடர்பான வழக்குகள் தாமதமாகும். கடனைத் தீர்க்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.

கும்பம்: உடல்நலக்குறை, மனச்சோர்வு, பதற்றம் வந்துபோகும். உடன்பிறந்தவர்களிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மீனம்: சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x