Published : 07 Feb 2021 06:30 AM
Last Updated : 07 Feb 2021 06:30 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு காணப்படும். செரிமானக் கோளாறு வந்து செல்லும். மாலை முதல் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.

ரிஷபம்: பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். எதிலும் நிதானம், எச்சரிக்கை தேவை.

மிதுனம்: உங்களின் நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். விஐபிகள் அறிமுகமாவார்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கடகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

சிம்மம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் வரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீட்டை ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள்.

கன்னி: எதிலும் உங்கள் கை ஓங்கும். மனஉறுதி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். எதிர்காலத் திட்டங்கள் குறித்து முடிவெடுப்பீர்கள்.

துலாம்: தடைகள் பல வந்தாலும் தளராமல் சாதிக்க முற்படுவீர்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

விருச்சிகம்: உங்கள் திறமை மீது உங்களுக்கே சந்தேகம் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது நல்லது.

தனுசு: மனஇறுக்கம் வந்து செல்லும். நீண்டதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். ஆன்மிகத்தில் மனம் ஈடுபடும்.

மகரம்: எதிர்ப்புகளை எளிதாக சமாளிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தடைபட்டிருந்த வீடு கட்டும் வேலை மீண்டும் வேகம் எடுக்கும். தாயார் ஆதரவாக இருப்பார்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x