Published : 04 Feb 2021 06:33 AM
Last Updated : 04 Feb 2021 06:33 AM
மேஷம்: மனக்குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மிதுனம்: இழுபறியாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு மாற நினைத்தவர்களுக்கு நல்ல வீடு அமையும்.
கடகம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
சிம்மம்: ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள்.
கன்னி: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
துலாம்: எந்த காரியத்தையும் பலமுறை முயன்றே முடிப்பீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். யாரையும் மனம் நோகும்படி உதாசீனப்படுத்தி பேச வேண்டாம்.
தனுசு: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை செய்வீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மகரம்: மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்: புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். எதிலும் நிதானம் தேவை.
மீனம்: உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். வாகனம் செலவு வைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT