Published : 30 Jan 2021 06:15 AM
Last Updated : 30 Jan 2021 06:15 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் தக்க சமயத்தில் உதவுவார்.

ரிஷபம்: வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் நிலவிய வீண் விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் விலகும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். இளைய சகோதரர் உதவுவார்.

கடகம்: வீடு, மனை வாங்குவது, விற்பது எளிதில் முடியும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

சிம்மம்: தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள்.

கன்னி: உறவினர், நண்பர்களுடன் கருத்துவேறுபாடுகள் வரும். எதைத் தொட்டாலும் இழுபறியில் முடியும். யாரை நம்புவது என்ற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.

துலாம்: சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள்.

தனுசு: இழுபறியாக இருந்த விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் சிறு வார்த்தைகள்கூட பெரிய தகராறில் போய் முடியும்.

கும்பம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x