Published : 20 Jan 2021 06:21 AM
Last Updated : 20 Jan 2021 06:21 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர் வகையில் பிணக்குகள் ஏற்படக் கூடும். வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப் படுத்துவீர்கள். முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். இழுபறியாக இருந்த சில காரியங்களை இன்று முடிப்பீர்கள்.
மிதுனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.
கடகம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்: பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். பிற்பகல் முதல் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும்.
கன்னி: தாய்வழியில் மதிப்பு உயரும். பயணங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
துலாம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். பிள்ளைகளால் புகழ், கவுரவம் உயரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கடனைத் தீர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
தனுசு: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
மகரம்: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
கும்பம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பயணம் செல்வீர்கள்.
மீனம்: முன்கோபத்தை குறைப்பது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங்கள். தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT