Published : 19 Jan 2021 06:29 AM
Last Updated : 19 Jan 2021 06:29 AM
மேஷம்: பிறமொழி பேசுபவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நண்பர்களால் எதிர்பாராது தொல்லைகள் ஏற்படக் கூடும்.
ரிஷபம்: எதிலும் வெற்றி கிட்டும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.. புது வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும்.
மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீடு வாங்குவது, விற்பது நினைத்தபடி முடியும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்: சமயோசிதமாகச் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கோயில் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
சிம்மம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். திடீர் உடல்நலக்குறைவுகள் ஏற்படக் கூடும். மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.
கன்னி: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தந்தைவழி சொத்து கைக்கு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள்.
துலாம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள்.
விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு மளமளவென்று வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். தோற்றப் பொலிவு கூடும்.
தனுசு: நீண்டகால பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.
மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
கும்பம்: அழகு, இளமை கூடும். செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மீனம்: வீண் செலவுகள் வரக்கூடும். உறவினர் பகை, நண்பர்களுடன் மனத்தாங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. சில காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT