Published : 12 Jan 2021 06:50 AM
Last Updated : 12 Jan 2021 06:50 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. மறைமுக எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக முயற்சியில் இறங்குவீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும்.

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையை சமாளித்து விடுவீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மிதுனம்: மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும்.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

துலாம்: புதியவர்கள் அறிமுகவார்கள். இழுபறியாக இருந்துவந்த தொகை கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.

விருச்சிகம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும்.

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறைக் காட்டுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள் ஏற்படக் கூடும்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். தாயாரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.

கும்பம்: சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக வாகனம், மின் சாதனங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

மீனம்: கடின உழைப்பால் காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். உங்களின் பேச்சு, செயலில் சமயோசிதம் வெளிப்படும். கலைப்பொருட்கள் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x