Published : 09 Jan 2021 06:37 AM
Last Updated : 09 Jan 2021 06:37 AM
மேஷம்: சகோதரர்களுடன் எதிர்பாராது மனவருத்தம் வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும். மின்சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். வழக்கு இழுபறியாகும்.
ரிஷபம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். புது தெம்பு பிறக்கும். பணவரவு திருப்தி தரும்.
மிதுனம்: வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும்.
கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.
சிம்மம்: சோர்வு களைப்பு நீங்கும். உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவதும் லாபகரமாக முடியும். தாயாரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.
கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மை ஏற்படும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் உண்டாகும்.
விருச்சிகம்: உடல் உஷ்ணம் அதிகரிப்பால் சில அவஸ்தைகள் ஏற்படக் கூடும். யாருக்கும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
தனுசு: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். வேலைக்காக எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.
மகரம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்களிடம் இருந்துவந்த பகை நீங்கும். உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டை ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள்.
கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.
மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். கலைப்பொருட்கள் சேரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT