Published : 01 Jan 2021 06:32 AM
Last Updated : 01 Jan 2021 06:32 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு நல்ல வீடு கிடைக்கும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு சாதகமான தகவல் வரும்

ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வீடு, மனை வாங்க முன்பணம் தருவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்: எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கடகம்: யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

சிம்மம்: பணம் வந்தாலும் செலவுகளும் அடுக்கடுக்காக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். வீடு பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.

கன்னி: எதிர்காலத்துக்கென பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்: பதவிகள் தேடி வரும். நீண்ட நாட்களாகக் காத்திருந்த விசா கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தக்க நேரத்தில் விஐபிகளும் உதவிகரமாக இருப்பார்கள். மனைவழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

தனுசு: அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். நீண்டதூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகரிக்கும்.

மகரம்: போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்: பிரச்சினைகள், சிக்கல்கள், உடல்நலக் குறைவுகள் என்று வந்தாலும் எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x