Published : 31 Dec 2020 06:41 AM
Last Updated : 31 Dec 2020 06:41 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: மனசாட்சிபடி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். பிற்பகல் முதல் பிரச்சினைகள் விலகத் தொடங்கும்.

கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.

கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். ஆன்மிகப் பயணம் செல்லத் திட்டமிடுவீர்கள்.

துலாம்: கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். தடைபட்ட வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம்: பொறுமையுடன் காரியங்களை முடிக்க முயலுங்கள். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பால்ய நண்பரை சந்திப்பீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

தனுசு: பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். வீட்டை ரசனைக்கேற்ப விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். பிற்பகல் முதல் எச்சரிக்கை தேவை.

மகரம்: வழக்கில் திருப்பம் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவுகளைப் பற்றி யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x