Published : 30 Dec 2020 06:28 AM
Last Updated : 30 Dec 2020 06:28 AM
மேஷம்: அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு.
ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். அழகு, இளமை கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.
மிதுனம்: புதிய முயற்சிகள் நீண்ட இழுபறிக்குப் பின் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
கடகம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். மறைமுகப் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள்.
சிம்மம்: பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் சிலர் உங்களிடம் வலிய வந்து பேசுவார்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: விலகியிருந்த உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகளைத் தீர்க்க வழி பிறக்கும். தேக்கமடைந்த வீடு கட்டும் பணிகள் மீண்டும் வேகமெடுக்கும்.
துலாம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வராது என்றிருந்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படும். கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். சில வேலைகளை முடிக்க முடியாமல் தடைகள் ஏற்படும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
தனுசு: சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். ஓரளவு பணவரவு உண்டு. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.
மகரம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். குடும்பத்துடன் ஆன்மிக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
கும்பம்: புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். தொட்ட காரியங்கள் துலங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
மீனம்: மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கடின உழைப்பு வெற்றி தரும். கடனைத் தீர்க்க வழி பிறக்கும். சகோதரர்கள் இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT