Published : 25 Dec 2020 06:38 AM
Last Updated : 25 Dec 2020 06:38 AM
மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள்.
ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். என்றாலும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாண பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும்.
சிம்மம்: தடைபட்ட வேலைகள் மீண்டும் வேகமெடுக்கும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மூத்த சகோதரர் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார்.
விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை.
மகரம்: அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
கும்பம்: சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.
மீனம்: நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பங்கு வர்த்தகம் ஓரளவு லாபம் தரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT