Published : 24 Dec 2020 06:34 AM
Last Updated : 24 Dec 2020 06:34 AM
மேஷம்: நண்பர்கள், உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். சொத்துப் பிரச்சினைகள் தீரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.
ரிஷபம்: சகோதரர் வகையில் எதிர்பாராது பிரச்சினைகள் வந்து நீங்கும். ரத்த அழுத்தத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மனைவியுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும்.
மிதுனம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை கண்டறிந்து வளர்ப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
கடகம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.
சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் பளிச்சிடும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்பார்கள்.
கன்னி: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
துலாம்: அடிமனதில் இருந்துவந்த போராட்டம் நீங்கும். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.
தனுசு: திடீர் யோகம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ஆன்மிக பயணம் செல்வீர்கள்.
மகரம்: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். குடும்பச் சூழ்நிலை அறிந்து பிள்ளைகள் செயல்படுவார்கள்.
கும்பம்: முன்கோபம் குறையும். தடைபட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.
மீனம்: முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும்..
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT