Published : 23 Dec 2020 06:18 AM
Last Updated : 23 Dec 2020 06:18 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்துடன் ஆன்மிகப் பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர வேண்டாம். கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து காட்டுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எல்லோரும் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை தெரிந்து கொள்வீர்கள். தடைபட்ட வீடு கட்டும் வேலை மீண்டும் வேகமெடுக்கும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் பெருமை ஏற்படும்.

கடகம்: நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் உயரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: வீட்டில் உள்ளவர்களுடன் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள், எதிலும் பிடிப்பற்ற போக்கு நிலவும். செய்நன்றி மறந்த ஒருவரை நினைத்து ஆதங்கப்படுவீர்கள்.

கன்னி: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வேலை தொடர்பாக நல்ல தகவல் வரும்.

துலாம்: எதிர்ப்புகள் அடங்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். திடீர் பயணங்கள் ஏற்படக் கூடும்.

விருச்சிகம்: பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். புது வாகனம் வாங்குவீர்கள்.

தனுசு: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.

மகரம்: பணவரவு திருப்தி தரும். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

மீனம்: ஒருவித படபடப்பு, பயம் காணப்படும். எதையோ இழந்ததைப் போன்ற உணர்வு ஏற்படும். எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x