Published : 22 Dec 2020 06:27 AM
Last Updated : 22 Dec 2020 06:27 AM
மேஷம்: குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். ஆனால் பேச்சில் நிதானம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
ரிஷபம்: நவீன ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.
மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். மகனுக்கு இருந்துவந்த கூடாபழக்க வழக்கங்கள் விலகும். சகோதரி உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார். பணவரவு உண்டு.
சிம்மம்: விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: மனோபலம் அதிகரிக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்கு வழி பிறக்கும்.
துலாம்: பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பயணம் செல்வீர்கள்.
விருச்சிகம்: வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தனுசு: பிள்ளைகளை கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.
மகரம்: வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். கலைப்பொருட்கள் சேரும்.
கும்பம்: புதிதாக சொத்து வாங்க திட்டமிடுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்-. குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
மீனம்: யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் சந்தேகம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT