Published : 20 Dec 2020 06:47 AM
Last Updated : 20 Dec 2020 06:47 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரம். ஆன்மிக பயணம் செல்வீர்கள்.

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கடகம்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிலும் நிதானம் அவசியம். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

சிம்மம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: மூத்த சகோதரரின் பிரச்சினையை தீர்ப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தில் ஆலோசிப்பீர்கள்.

விருச்சிகம்: பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.

தனுசு: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். உங்கள் பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள்.

கும்பம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் தடைகள் ஏற்படும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

மீனம்: உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சகோதரர் பாசமழை பொழிவார். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதுகூட சிக்கலை ஏற்படுத்தும். எனவே எதிலும் நிதானம் அவசியம்..

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x