Published : 17 Dec 2020 06:50 AM
Last Updated : 17 Dec 2020 06:50 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் சூழ்நிலையறிந்து செயல்படுவார்கள். நண்பர்களிடம் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்..

ரிஷபம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு உண்டு.

மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.

கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள்.

சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

துலாம்: உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: வெகுநாட்களாக மனதை உறுத்திய பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும்.

தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வீர்கள். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.

மகரம்: பல வேலைகளை இழுத்துப் போட்ட பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்: ஆடம்பரமான செலவுகளை குறைப்பது நல்லது. மறைமுகப் போட்டிகளுக்கு சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும்.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்கள் முடிப்பீர்கள். மனைவிவழி உறவினரால் நன்மை ஏற்படும்.. பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x