Published : 14 Dec 2020 06:41 AM
Last Updated : 14 Dec 2020 06:41 AM
மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீ்ர்கள்.
ரிஷபம்: பணப்பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.
கடகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
சிம்மம்: அடிமனதில் நிலவிய பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள்.
கன்னி: உங்களின் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
துலாம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.
விருச்சிகம்: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.
தனுசு: பிள்ளைகளின் பிடிவாத குணம் நீடிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கும். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும்..
மகரம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு உண்டு.
கும்பம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.
மீனம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவான முடிவு எடுப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீரகள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT