Published : 08 Dec 2020 06:33 AM
Last Updated : 08 Dec 2020 06:33 AM
மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார்.
ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
சிம்மம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வீடு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
கன்னி: யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.
துலாம்: கடன் பிரச்சினைகளைத் தீர்க்க வழி பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள்.
தனுசு: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
மகரம்: உங்களுடைய பலம், பலவீனம் உணர்ந்து கொள்வது நல்லது. பல காரியங்கள் இழுபறிக்குப் பின்னர் முடியும். இளைய சகோதரருடன் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்..
கும்பம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.
மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT