Published : 06 Dec 2020 06:24 AM
Last Updated : 06 Dec 2020 06:24 AM
மேஷம்: பழைய இனிய சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பணவரவு உண்டு.
ரிஷபம்: மனோபலம் கூடும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
மிதுனம்: புத்திசாலித்தனமாக செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். பழைய நண்பர், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
கடகம்: தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். நண்பர்களுடன் பகைமை வரக் கூடும். இளைய சகோதரர் வகையில் இடையூறுகள் இருக்கும். மாலை முதல் மகிழ்ச்சி ஏற்படும்.
சிம்மம்: அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களிடம் உதவி கேட்டால் அவர்கள் உண்மையாகவே சிரமப்படுகிறார்களா என்பதை அறிந்து உதவுங்கள்.
கன்னி: மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
துலாம்: உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்பக்கத்தினரின் அன்பு தொல்லை அதிகரிக்கும்.
விருச்சிகம்: எதிலும் வெற்றி, லாபம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
தனுசு: சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். எந்த ஒரு வேலையும் அலைச்சல்களுக்குப் பிறகே முடியும்.. அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாக தலையிடாதீர்கள்.
மகரம்: உங்களின் அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். குடும்ப வருமானம் உயரும். எதிலும் நிதானம் தேவை.
கும்பம்: புது தெம்பு பிறக்கும். விஐபியின் அறிமுகம் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடிவடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்தி வரும்.
மீனம்: உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வராது என்றிருந்த தொகைக் கைக்கு வரும். கலைப்பொருட்கள் சேரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT