Published : 04 Dec 2020 06:39 AM
Last Updated : 04 Dec 2020 06:39 AM
மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு சகல வசதியுடன் புது வீடு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். கடன் பிரச்சினையைத் தீர்க்க வழி பிறக்கும். தாயாரின் ஆதரவாக இருப்பார்.
ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களின் நல்ல மனதைப் புரிந்து கொள்வார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிநாடு செல்வதற்கு ஏற்பாடு செய்வீர்கள்..
மிதுனம்: பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
கடகம்: யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். நண்பர்களால் வீண் அலைச்சல் ஏற்படும்.
சிம்மம்: பணம் வந்தாலும் செலவுகளும் அடுத்தடுத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
கன்னி: எதிர்காலத்துக்கான பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
துலாம்: பதவிகள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான காலம் கனிந்து வரும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தக்க நேரத்தில் வி.ஐ.பிகளும் உதவிகரமாக இருப்பார்கள். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.
தனுசு: செல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவதை தவிர்த்து விடுங்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டியது வரும். மனைவிவழி உறவினர் ஆதரவாக இருப்பார்.
மகரம்: எதிலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்: பிரச்சினைகள், சிக்கல்கள், உடல்நலக் குறைவு என்று எது வந்தாலும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள்.
மீனம்: பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.. வீடு, வாகனம் வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT